பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் யாழ். பல்கலைக்கழக கல்லூரி ஆண்கள் அணி தனது தீவிர விிளையாட்டில் தனது வெற்றியை பெற்றது.
இச் சுற்று போட்டிகளானது குளியாப்பிட்டிய பல்கலைக்கழக கல்லூரியில் இரவு பகல் ஆட்டம் என ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் 11 ஆண்கள் அணி மற்றும் 06 மகளிர் அணிகளும் பங்கேற்றிருந்தது மகளீர் அணி சார்ப்பில் இறுதிப்போட்டியில் ரத்மலான பல்கலைக்கழக கல்லூரியும் மாத்தறை பல்கலை கழக கல்லூரியும் மகளீர்க்கான இறுதிப்போட்டியில் மோதியது.
இதனைத்தொடர்ந்து மாத்தறை மகளிர் அணி மகுடம் சூடியது. ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் குளியாப்பிட்டிய பல்கலைக்கழக கல்லூரி அணி மற்றும் யாழ்ப்பான பல்கலைக்கழக கல்லூரி அணி மோதியது இதில் யாழ். பல்கலைக்கழக கல்லூரி அணி அபார வெற்றியடைந்தது.
Tags:
இலங்கை செய்திகள்