யாழில் கம்பு வெட்டிய போது 3 பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு !




யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் மின்சாரம் தாக்கி 48 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.


தனது வீட்டு வேலியில் பயற்றங் கொடி நடுவதற்காக நேற்று ,மின்சார வயரின் உயரம் வரை வளர்ந்திருந்த மரத்திலிருந்து கம்பு ஒன்றை வெட்ட முற்பட்ட போது மின்சாரம் தாக்கியுள்ளது .


இதன்போது வீதியால் சென்றவர்கள் மூலமே குறித்த நபருக்கு மின்சாரம் தாக்கியமை வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது


இவ்வாறு உயிரிழந்தவர் மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கு சேர்ந்த 48 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தந்தை என போலீசார் தெரிவித்த்துள்ளனர் .


சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு சம்பவ இடத்தையும் பார்வையிட்டார்.


பிரேத பரிசோதனையில் மின்சாரம் கடுமையாக தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் அப் பகுதியில் மின்சார கம்பிகள் காணப்படுகின்ற போதிலும் நீண்டு வளர்ந்திருந்திருக்கும் மரங்களை மின்சார சபையினர் வெட்டாமையினாலேயே இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதாக பிரதேச பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.


கருத்துரையிடுக

புதியது பழையவை