இலங்கையின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை சுற்றுலா துறை ஊக்குவிக்கும் செயற்பாட்டாளர்கள் சங்கம் (SLITO) மற்றும் இலங்கை மாநாடுகள் பணியகம் (SLCB) ஆகியவை இணைந்து நாடளவில் முதல் முறையாக “Sri Lanka MICE Tourism Conclave 2025” எனும் தலைப்பில் ஒரு முக்கிய முன்நெடுப்பை அறிமுகப்படுத்தின.
இந்நிகழ்வில் அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை பங்குகொண்டு, சுற்றுலா துறை சார்ந்த புதிய யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான போட்டி ஒன்றை ஏற்பாடு செய்தன.
இப்போட்டியில் இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோரிடமிருந்து 140 ஆக்கபூர்வமான முன்மொழிவுகள் பெறப்பட்டன. அவை நிபுணர்கள் குழுவினால் மதிப்பீடு செய்யப்பட்டு சிறந்த 3 முன்மொழிவுகள் தெரிவுசெய்யப்பட்டன.
📌தனிநபர் பிரிவில்,
📌யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் H.S. டினுஷா மேரிஏன் இரண்டாம் இடத்தையும்
📌டினுஷா ஆனந்தராஜா மூன்றாம் இடத்தையும் பெற்ற பெருமையை யாழ் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.
வெற்றியாளர்கள் தங்களது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகள், முதலீட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் தொழில் நிபுணர்களின் பங்களிப்புடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இவ்விழா மற்றும் "சஞ்சாரக உதாவ" எனும் சுற்றுலா கண்காட்சி 2025 வைகாசி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த சாதனையின் மூலம் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவிகள் இலங்கையின் சுற்றுலா துறையில் புதிய திட்டங்களை நோக்கி பயணிக்கும் திறமையைக் வெளிப்படுத்தியுள்ளனர்.
இவ்விழா மற்றும் "சஞ்சாரக உதவ" எனும் சுற்றுலா கண்காட்சி 2025 வைகாசி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த சாதனையின் மூலம் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவிகள் இலங்கையின் சுற்றுலா துறையில் புதிய திட்டங்களை நோக்கி பயணிக்கும் திறமையைக் வெளிப்படுத்தியுள்ளனர்.