உயிலங்குளம் பொலிஸ் பிரிவின் சிறுநாவற்குளம் பகுதியில் ரயிலில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறந்தவர் தனது குடும்ப உறுப்பினர்களை தலைமன்னாரிலிருந்து கொழும்பு செல்லும் ரயிலில் சிறுநாவற்குளம் ரயில் நிலையத்தில் ஏற்றிவிட்டு ரயில் பயணிக்கும் போது அதிலிருந்து இறங்க முயன்றதாக தெரியவந்துள்ளது.
இதன்போது ரயிலில் இருந்து விழுந்த அந்த நபர் பலத்த காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து உயிலங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.