கிணற்றில் நண்பர்களுடன் நீராடிய சிறுவன் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .
நெற்கொழு கழுகு மைதானத்திற்கு அண்மித்த பகுதியில் , நேற்று மாலை 2:00 மணியளவில் கிணற்றில் ஏழு நண்பர்களுடன் நீராடிய போது குறித்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது ,
கம்பர்மலையை சேர்ந்த நிரஞ்சன் நிரக்சன் வயது 17 என்ற சிறுவன்
இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைககப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்திகள்
