பிரபல யூடிபர் DK கார்த்திக் மற்றும் அவரது மனைவி கைது! வெளியான முழு விபரம் !


கிளிநொச்சியை சேர்ந்த பிரபல யூடிபர் DK கார்த்திக் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். என செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன் தர்மபுரம் பகுதியில் நடந்த வாள்வெட்டு தாக்குதலுடன் குறித்த தம்பதியினருடன் தொடர்புகள் உள்ளதென பாதிக்கப்பட்டவர்களால் குற்றம் சுமத்த பட்டிருந்ததை தொடர்ந்து யூடிபர் DK கார்த்திக் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவ்வாள்வெட்டு தாக்குதலுக்குலான குறித்த குடும்பத்தினருக்கு முதுகில் மற்றும் கைகளில் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமன்றி அவரது மனைவிக்கு 6 வெட்டுக்களும் தாயாரின் கை முறிக்கப்பட்டுள்ளது.


அதனை தொடர்ந்து இத்தாக்குதலுக்கு உள்ளான குடும்பத்தினர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதன் போதே இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் யூடிபர் DK கார்த்திக் மற்றும் அவரது மனைவி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து  நேற்றைய தினம் (15)  கிளிநொச்சி பொலிஸாரால் இத்தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதனை தொடர்ந்து  இத்தம்பதியினருக்கு மார்ச் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை