யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று வவுனியா கனகராயன் குளப்பகுதில் திருட்டில் ஈடுபட்டு வந்த குறித்த நபர் மக்களால் மடக்கி பிடிக்கபட்டு கனகராயன் பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் (15) ஒப்படைக்கப்பட்டுள்ளனர். என தகவல்கள் தெரியவருகின்றது.
இச்சம்பவங்கள் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் .......
வவுனியா கனகராயன்குளம் மற்றும் குறிச்சுட்டான்குளம் பகுதிகளில் உள்ள மூன்று(3) வீடுகளில் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்த இளைஞர் குழு நேற்றைய முன் தினம் (14) இரவு தொலைபேசி மற்றும் தங்க நகைகள் என்பவற்றை திருடி சென்றுள்ளனர்.
இதன் போது இளைஞசர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து குறித்த திருட்டில் ஈடுபட்ட குழுவை மடக்கி பிடிக்க முற்பட்ட வேலையில் ஏனையோர் தப்பி செல்ல தங்க நகையுடன் நேற்றைய தினம் அதிகாலை யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த நபர் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் கனகராயன்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.