வவுனியா – தேவகுளம் பகுதியில், 23 வயது இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா மறவன்குளம் பகுதியை சேர்ந்த முனிரத்தினம் கருணா என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. முதலில் இது தற்கொலை என கருதப்பட்டாலும், சம்பந்தப்பட்ட முக்கியமான பொருட்கள் வெளியில் கிடந்தமையால், இது ஒரு குற்றச்செயலாக இருக்கலாம் என்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இன்று (17) காலை சடலத்தைக் கண்டுபிடித்த மக்கள் பொலிசாரித்திற்கு தகவல் வழங்கியுள்ளமை தெரிய வருகின்றது.
பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் வழங்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர் .