சிகிச்சையின் போது உயிரிழந்த பெண்களுக்கு நீதி கேட்பது குற்றமா? மன்னாரில் மூவர் கைது!


மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்று சிகிச்சையின் போது உயிரிழந்த சிந்துஜா, மற்றும் பட்டித்தோட்டத்தைச் சேர்ந்த வேனுஜா மற்றும் அவரது சிசுவின் மரணங்களுக்கு நீதி கோரிய மூவர், நேற்று (சனிக்கிழமை) மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகள்:


  • சட்டவிரோதமாக பொதுமக்களை ஒன்றுகூட்டியமை.
  • பொது சொத்துக்களை சேதப்படுத்தியமை.
  • பல பிரிவுகளுக்குள் குற்றச்சாட்டுகள்.


இந்த மூவரும் இப்போது பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


பின்னணி:கடந்த டிசம்பர் மாதம், மன்னார் பொது வைத்தியசாலையின் முன்னால், அந்த மருத்துவமனையில் இடம்பெறும் சீர்கேடுகள் மற்றும் பணிச்சுமை தவறுகள் உள்ளிட்டவை தொடர்பாக அமைதியான முறையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


பல மாதங்களுக்கு பின்னர், இப்போது அந்த அமைதிப் போராட்டத்தில் கலந்து கொண்ட மூவரை கைது செய்துள்ள மன்னார் பொலிசாரின் நடவடிக்கையை தமிழர் சமூகத்தில் பலர் அதிர்ச்சியுடனும், எதிர்ப்புடனும் எதிர்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை