சிறுபான்மையினரால் விரும்பப்பட்ட பாலித உயிரிழந்தார்

                                                                           


களுத்துறை மாவட்ட சிறுபான்மையினரால் விரும்பப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும உயிரிழந்தார்.

64 வயதான முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கியது

இதனையடுத்து அவர்  நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்

பாலித தெவரப்பெரும களுத்துறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார்

எனினும் தற்போதைய நாடாளுமன்றத்துக்கு அவரால் பிரவேசிக்கமுடியவில்லை.


கருத்துரையிடுக

புதியது பழையவை