எக்ஸ் தளத்தின் புதிய பயனாளர்களிடமிருந்து கட்டணம் அறவிடப்படவுள்ளது.
Tesla, SpaceX மற்றும் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் இதனை அறிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் புதிதாக இணைவோரிடம் கருத்துக்களை பதிவிடல், பிறரின் கருத்துக்கு பதிலளித்தல் மற்றும் பதிவுகளை லைக் செய்தல் உள்ளிட்ட சில செயற்பாடுகளுக்கு கட்டணம் அறவிடப்படவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் போலி கணக்குகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் மூன்று மாதங்களுக்கு பின்னர் அதே பயனர் பதிவிடல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லையெனவும் Tesla, SpaceX மற்றும் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
Tags:
முக்கியச் செய்திகள்