வவுனியாவில் வெளிநாட்டில் இருந்து வருகைதந்த நபர் ஒருவருடன் இணைந்து புளியங்குளம் காவல்துறையினர் இளம் குடும்பஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
வவுனியா, சின்னப்பூவரசங்குளத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் தகவல் வழங்கியுள்ளார்.
"விசாரணை ஒன்று இருப்பதாக புளியங்குளம் காவல்துறையினர் என்னை அழைத்தனர்.
நான் அங்கு சென்ற நிலையில் எனது தொலைபேசி, கைப்பை என்பன பறிக்கப்பட்டு இரு கையிலும் விலங்கு போடப்பட்டது.
காவல்துறை நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உட்பட ஏனைய காவல்துறையினர் என்னை பிடித்து வைத்திருக்க, வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த நபர் ஒருவர் காவல்துறை நிலையத்திற்குள் வைத்து என்னை தாக்கினார்.
இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், என்னிடம் வாக்குமூலம் பெற்றுவிட்டு பொலிஸ் நிலையத்தில் இருந்து என்னையும் எனது மனைவி பிள்ளைகளையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்
மேலும், குறித்த விடயம் தொடர்பாக தாக்கப்பட்டவரின் மனைவி வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்
Tags:
இலங்கை செய்திகள்