இலங்கையை ஆய்வு செய்யும் பெல்ஜியப் பயணியான டிம் டென்ஸ் என்பவர், தனது களுத்துறை விஜயத்தில் இருந்து ஒரு சிக்கலான சந்திப்பைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் வழங்கிய தகவல்படி, உள்ளூர் உணவகத்தில், அவர் ஒரு மோசடிக்கு உள்ளானார்.
அங்கு அவருக்கு அதிகப்படியாக ஒரு உளுந்து வடை மற்றும் ஒரு கோப்பை தேநீருக்கு 1,000 ருபாய் அறவிடப்பாடுள்ளது.
இதனையடுத்து, இலங்கையின் களுத்துறையில் இந்த மனிதனைத் தவிர்க்கவும்" என்ற தலைப்பில் தனது யூடியூப் காணொளியில் தனது அனுபவத்தை விபரித்துள்ளார்.
அவர் தனது சொந்த முச்சக்கரவண்டியில் களுத்துறையை பார்வையிட்டார்.
வாகனம் நிறுத்தியவுடன், அவரை ஒரு இலங்கையர் அணுகினார்,
அவர் உண்மையான இலங்கை உணவு அனுபவத்திற்காக ' வதனி விலாஸ் சைவர் கடே' என்ற இடத்திற்கு அழைத்துச் செல்ல முன்வந்தார்.
ஆரம்பத்தில் உணவருந்தத் திட்டமிடாவிட்டாலும், ஒரு உளுந்து வடையும் சாதாரண தேநீரும் பரிமாறப்பட்ட உணவகத்திற்கு உள்ளூர் நண்பர் டிம்மை அழைத்துச் சென்றார்.
அங்கு வடை மற்றும் தேநீரைய் பெற்ற பின்னர், கட்டணம் பற்றி விசாரித்தபோது, 1,000 ருபாய் என்று கூறப்பட்டது.
இதில் ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்த அவர், விலை தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
இதன் விளைவாக 800 ருபாய் அவரிடம் அறவிடப்பட்டது.
எனினும், தமது காணொளியை செம்மைப்படுத்தும் போது, அவர் சுவரில் விளம்பரப்படுத்தப்பட்ட விலை கணிசமாகக் குறைவாக இருப்பதைக் கவனித்தார்,
அதில் தாம் ருசித்த உணவுக்கு 80 ரூபாய் என்பதை அவர் புரிந்து கொண்டார்.
இந்தநிலையில் 1,000 ருபாய் பணத்தை கொடுத்து, 200 ருபாய் மீதியை பெற்றுக்கொண்ட அவர், உணவகத்தில் இருந்து வெளியேறும் போது, காசாளர் மற்றும் நடத்துனரிடம் உயர்த்தப்பட்ட விலை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இருப்பினும், சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக கூறி, அவர்கள் அதை நியாயப்படுத்தினர்.
எனினும் உள்ளூர் பெண்கள் இருவர் அவர் ருசித்த உணவுக்கு 150 ரூபாய்களே செலவாகியிருக்கும் என்று தெரிவித்தனர்.
டிம் தனது காணொளியில் தம்மை வழிநடத்தியவரின் நேர்மையின்மையைக் கண்டித்துள்ளார்.
இலாபத்தை விட நற்பெயரின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்
களுத்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், நிதி இழப்பு இருந்தபோதிலும், டிம் நியாயமான கொள்கையை வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி ஏப்ரல் 10ஆம் திகதி 'டிம் டென்ஸ்' பக்கத்தில் வெளியிடப்பட்டது.