ஈரானின் தாக்குதலுக்கு உள்ளான இஸ்ரேல்- பலத்த வெடிப்பு சத்தங்கள்

                                                                         


ஈரான், இஸ்ரேலை நோக்கி பல ஆளில்லா விமானங்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகளை ஏவியுள்ளது.

இது, பிராந்தியத்தில் பரந்த மோதலின் அச்சத்தை அதிகரித்துள்ளது.

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு வானிலிருந்து, தாக்குதல் ஆள் இல்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள்  இடைமறிக்கும் போது பலத்த எச்சரிக்கை ஒலிகள் மற்றும் உரத்த வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலை நோக்கிச் சென்ற சில ஈரானிய ஆளில்லா விமானங்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாகவும்  ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவும் இங்கிலாந்தும் இஸ்ரேலை குறிவைத்து ஆளில்லா விமானங்களை இடைமறிக்க உதவியுள்ளன.

இந்த தாக்குதலை அடுத்து அந்த பகுதியில் உள்ள பல நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன.

ஜோர்தானிய ஜெட் விமானங்கள் வடக்கு மற்றும் மத்திய ஜோர்டான் வழியாக இஸ்ரேலுக்கு செல்லும் டஜன் கணக்கான ஈரானிய ட்ரோன்களை வீழ்த்தியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஜோர்தான்  வான்வழியாக,, ஜெருசலேம் நோக்கி சென்று கொண்டிருந்த ஆளில்லா விமானங்களே சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

அத்துடன் ஈராக்-சிரிய எல்லைக்கு அருகிலும் அவை  தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

மேற்கத்திய தலைவர்கள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்,

இது பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் அபாயம் இருப்பதாக அவர்கள்  எச்சரித்துள்ளனர்.

பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய போர் அமைச்சரவை, ஏப்ரல் 14 அன்று டெல் அவிவ்வில், ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல் பற்றி விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்துகிறது.

டமாஸ்கஸில் உள்ள தனது தூதரக வளாகத்தில் மூத்த ஈரானிய இராணுவ அதிகாரிகளைக் கொன்ற தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக ஈரான் சபதம் செய்ததால், காசாவில் பல மாதங்களாக நீடித்த பதற்றங்கள் கடந்த வாரம் புதிய நிலைகளை எட்டியுள்ளன. 

கருத்துரையிடுக

புதியது பழையவை