ஜனாதிபதி வேட்பாளர்கள் தகுதிகளை காட்ட வேண்டும்



இலங்கையின் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் பகிரங்க விவாதங்களில் ஈடுபட்டாலும் இல்லாவிட்டாலும், தங்களின் வெளிப்படையான தகுதிகளை மக்களுக்கு காட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.


அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும், உயர்தரம், பட்டப்படிப்பு  அல்லது முதுநிலை/தொழில்முறை தகைமைகள், எதுவாக  இருந்தாலும், தங்கள் தகுதிகளை மக்களுக்கு காட்ட வேண்டும்.


நாட்டில், ஒரு அற்புதமான ஸ்திரமான மீட்சிக்குப் பிறகு இந்த நாட்டைச் சிதைக்கும் வெறும் பேச்சாளர்கள் இருக்க முடியாது," என்றும் நவீன்  திஸாநாயக்க, தமது X இல் பதிவிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை