கோட்டாபய பயன்படுத்திய அதி சொகுசு வாகனமொன்று பிரபல மாடல் அழகியிடம்

                                                                  


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்திய அதி சொகுசு வாகனமொன்று பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி தற்பொழுது பயன்படுத்தி வருகின்றமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகே ரட்ட (எனது நாடு) அமைப்பின் தலைவர் சஞ்சய மெதவத்த இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். சட்டவிரோத சொத்து குவிப்பு பிரிவிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் ரக வாகனமொன்றை தற்பொழுது பியூமி பயன்படுத்தி வருகின்றார் என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கும் தருணத்தில் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிகளில் அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளதாக சஞ்சய தெரிவித்துள்ளார்.

நிதிச் சலவையில் ஈடுபடுவோர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த அதி சொகுசு வாகனத்தை பியூமி எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பது குறித்து சந்தேகம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல மாடல் அழகியான பியூமி அதி சொகுசு வீடொன்றில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசியல்வாதிகளின் கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு பியூமியை பயன்படுத்துகின்றார்களா என்ற சந்தேகம் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

புதியது பழையவை