முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் கடற்படையினர் மீது குற்றச்சாட்டு

                                                                 


முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் கொக்குளாய் வரையான கடற்பரப்பில் அதிகரித்துவரும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடற்படையினர் தவறிவருவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிடம் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் பல படகுகள் மின் விளக்கினை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதாகவும் இதன்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனால், சாதாரண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கடல்வளம் அழிக்கப்படுவதாகவும் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் ஆகியோர் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை