இந்திய மக்களவை தேர்தலில் தமிழ்நாடு வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் இன்று தேர்தல் பிரசாரத்தின்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நாளை மறுநாள்ஏப்ரல ; 19 நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் மன்சூர் அலிக்கான், சுயேட்சையாக வோலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
முன்னதாக அவரின் கட்சியான இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை தேர்தல் ஆணையகம் அங்கீகரிக்காமை காரணமாகவே அவர் சுயேட்சையாக போட்டுகிறார்
இ;ந்தநிலையில் இன்று வேலூர் வாணியம்பாடி குடியாத்தம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோதே அவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டது.
இதையடுத்து, குடியாத்தம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர் பின்னர் சென்னைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்