பப்புவா நியூ கினி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக தலைநகர் போர்ட் மோர்ஸ்பையில் நடந்த தீப விழாவில், பப்புவா நியூ கினி மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநரான, தமிழ்நாடு, சிவகாசியைப் பிறப்பிடமாகக் கொண்ட சசீந்திரன் முத்துவேல் சாதனை தமிழன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அவருக்கான'சாதனைத் தமிழன்” விருதை பப்புவா நியூ கினி வாழ் இலங்கைத் தமிழரும்,ஐடீளுரு பல்கலைக்கழக நிறுவனத் தலைவருமான மாணிக்கம் நடேசலிங்கம் வழங்கினார்.
ஆளுநர் சசீந்திரன் முத்துவேல், மேற்கொண்ட உயரிய சேவைகளுக்காக, அவருக்கு பப்புவா நியூ கினி நாட்டு அரசாங்கம்; பல்வேறு விருதுகளையும்,பட்டங்களையும் வழங்கியுள்ளது.
அத்துடன் அண்மையில்;, இந்திய நாட்டின் உயர்ந்த விருதான பத்மசிறி விருதுக்கும் அவர் தெரிவாகியுள்ளார்.
பப்புவா நியூ கினியாவில் நடைபெற்ற தீப விழாவில்,பப்புவா நியூ கினி வாழ் தமிழ் மக்களும், தமிழ்ச் சங்கத்தினரும் கலந்து சிறப்பித்தனர்.