மன்னாரில் சிறுமி ஒருவர் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சிறுமியின் சடலமானது நேற்று முன்தினம் மன்னாரில் அதிகாலை 3.30மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்காப்பட்டு ழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளது மருத்துவ அறிக்கையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சிறுமி அப்பகுதியை சேர்ந்த அ.ஆன்கியான்சிதா என்ற சிறுமி என தெரியவந்துள்ளது.
இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உறுதிசெய்த பின்னர் சடலமானது வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய சந்தேகநபரான தென்னந்தோட்ட பராமரிப்பாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.