முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீர்த்தக்கரை பகுதியிலிருந்து கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் மீண்டும் கரைக்கு திரும்பாததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த கடற்றொழிலாளர் நேற்று(19.06.2025) இரவு கடலுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், இன்று அப்பகுதி கடற்றொழிலாளர்கள் கடலுக்கு சென்ற காணாமல் போன கடற்றொழிலாளரின் படகு கடலில் மிதந்து வருவதை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து, காணாமல் போன கடற்றொழிலாளரின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு கடலில் இருந்து அவர் பயணித்த படகினை கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
குறித்த கடற்றொழிலாளர், சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்களால் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டிருக்கலாம் என கடற்றொழிலாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.