அர்ச்சுனாவுக்கு தற்காலிக தடை - சபாநாயகர் அதிரடி அறிவிப்பு! முழுமையான செய்திகளுக்கு

 


எதிர்வரும் 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும், கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்வதற்கு சபாநாயகரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் வெறுப்புப் பேச்சுகள் மற்றும் விமர்சனங்களால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சபையில் அறிவித்தார்.


இதன்படி அவரது வெறுப்பு பேச்சுக்களை ஹன்சார்ட் பதிவிலிருந்தும் நீக்குமாறு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை