கிளிநொச்சி வைத்தியசாலையில் 26 வயது இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்.


 கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள புனர்வாழ்வு வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவர் கிளிநொச்சி திருநகர் பகுதியை சேர்ந்தவராவார். இவர் கடந்த 8ம் திகதி அன்று புனர்வாழ்வு பெற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சடலமாக மீட்க்கப்பட்டவர் வயது (26) உடையவரும் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரிய வருகின்றது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி தடவியல்  பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை