நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நிறைவு அனுஷ்டிக்கப்பட்டு நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது..
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த அன்னை பூபதியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வடக்கு - கிழக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளது.
குறித்த ஊர்தி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டதனையடுத்து அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத் தலைவி கா.ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன், தாய்மாரால் மலர்மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்திகள்