தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் வடக்கு,கிழக்கு அரசியல், சிவில் அமைப்புக்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக மிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தேர்தலைப்புறக்கணிப்பதால் பயனில்லை என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
70ஆண்டுகளாக தென்னிலங்கை தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்து தமிழ் மக்கள் வாக்களித்து வந்துள்ளபோதும் தற்போது வரையில் ஏமாற்றமே எஞ்சியுள்ளது
ஆகவே தான் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தீர்க்கமான முடிவுகளை நாம் எடுப்பதற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எமக்கு முன்னால் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதற்கான தெரிவொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவால் எவ்விதமான பயனுமில்லை.
காரணம் பிறகட்சிகள் தலையீடுகளைச் செய்து தமிழ் மக்களின் வாக்குகளை தம்வசப்படுத்துவதற்கே முயற்சிகளை எடுக்கும்.
ஆகவே ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதை விடவும் எமது மக்கள் சார்பில் ஒரு வேட்பாளரை களமிறக்குவதே பொருத்தமானதாகும் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்..
இவ்வாறான பின்னணியில் எதிர்வரும் நாட்களில் நாம் வடக்கு கிழக்கு அரசியல் சிவில் தலைவர்களைச் சந்தித்து மீண்டும் கலந்துரையாடல்களைச் செய்யவுள்ளதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்..