பிரேசிலில், இறந்து பல மணி நேரம் கடந்த 68 வயது முதியவரின், உடலத்தை, உயிரோடிருப்பதாக காட்டி, கடனுக்கு, கையொப்பமிட வங்கிக்கு அழைத்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைநகர் -ரியோ டி ஜெனிரோவின் புறநகர்ப் பகுதியில் உள்ள வங்கியில், குறித்த உடலத்தை சக்கர நாற்காலியில், அமர்த்தி வங்கிக்கு கொண்டு சென்ற, எரிகா வியேரா நூன்ஸ் என்ற இந்த பெண், குறித்த ஆண் 17,000 ரைஸ் (2,600 டொலர் ) கடன் பெற விரும்புவதாக வங்கி ஊழியரிடம் கூறியுள்ளார்.
பின்னர், அந்த பெண், அந்த நபரிடம் ஒரு பேனாவை கொடுத்து,"மாமா, உங்களுக்கு கேட்கிறதா ? நீங்கள் கையெழுத்திட வேண்டும்" என்று கூறுகிறார். இதனை வங்கியின் காணொளி பதிவு காட்டுகிறது.
எனினும்,, அந்த ஆண் எதுவும் பேசவில்லை, இதன்போது, 'உங்களுக்கு உடம்பு சரியில்லை என்றால், நான் உங்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறேன்' என்று அந்த பெண் கூறுகிறாள்.
எனினும் இதன்போது, அந்த நபரின் தலை, தொடர்ந்து கீழே சரிந்ததால் வங்கி ஊழியர்கள் சந்தேகமடைந்தனர்,
எனவே அவர்கள், குறித்த பெண்ணை, கைது செய்த காவல்துறையை அழைத்தனர்.
ரியோ செய்தித்தாள் ஓ தியாவின் படி, குறித்த பெண், ஒரு உடலத்தை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார் மற்றும் மோசடி மூலம் திருட முயன்றார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த ஆணின் மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை.
அவர் இறந்துவிட்டார் என்பது அந்த பெண்ணுக்கு முன்னதாகவே தெரியும் என்றும், அவர் இறந்து குறைந்தது இரண்டு மணிநேரம் ஆகியிருக்கும்" என்று விசாரணை அதிகாரி ஒருவர் கூறினார்.
"22 வருடங்களில் இது போன்ற ஒரு கதையை, காவல்துறை சேவையில் "நான்பார்த்ததில்லை' என்றும் அவர் கூறியுள்ளார்
குறித்த பெண் உண்மையில் அந்த இறந்து போன ஆணுடன் தொடர்புடையவரா என்று காவல்துறையினர் விசாரித்து வருவதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், தமது கட்சிக்காரர் அழைத்து வந்த ஆண், வங்கியில் வைத்தே இறந்தார் என்று பெண்ணின் சட்டத்தரணி வாதிட்டார், ஆனால் தடயவியல் பகுப்பாய்வு, அவர் முன்னதாகவே இறந்துவிட்டார் என்று தீர்மானித்தது என்று ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது