யாழில் இடம்பெற்ற விபத்தில் அரச உத்தியோகத்தர் உயிரிழப்பு



யாழ்.அரசடியில் நேற்றிரவு நடைபெற்ற விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தரான  ஐங்கரன் என்பவரே உயிர்ழந்துள்ளதாக தெரியவருகின்றது.  


தனது மகனை தனியார் வகுப்பில் இருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த வேளை, பிறவுண் வீதியில் நேற்றிரவு 8.45 மணியளவில் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்துள்ளனர்.


படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

கருத்துரையிடுக

புதியது பழையவை