அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலையை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு !



குழந்தைகள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா நோய் அறிகுறிகள் தென்படுவது இந்த நாட்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.


காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல் வலிகள் போன்ற அறிகுறிகள் தெனபட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.  


மழை மற்றும் குளிர்காலத்தில் இன்ஃப்ளூயன்ஸா தொற்று அதிகம் ஏற்படலாம். எனவே, தொற்று அபாயம் உள்ளவர்கள் வருடம் ஒருமுறை தடுப்பு மருந்து எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது

 

கருத்துரையிடுக

புதியது பழையவை