கிளிநொச்சி - இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் 14 வயதுடைய செல்வரத்தினம் றுசாந்தன் எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தில் நீராடுவதற்காக குறித்த சிறுவனும், அவரது சகோதரன் மற்றும் இரு நண்பர்களுமாக சென்றுள்ளார்.
நேற்று காலை 11.30 மணியளவில் இவர்கள் நீராடச் சென்று காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில் குறித்த சிறுவனை பொலிஸார், இரணைமடு மீனவர்கள், பிரதேச மக்கள் நீண்ட நேரமாக தேடி வந்த நிலையில் நேற்று மீட்க முடியாது போயுள்ளது.
இதையடுத்து இன்று மீண்டும் தேடப்பட்ட நிலையில் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்திகள்