உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆசிரியை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்
உடுப்பிட்டி மகளிர் கல்லூரி நாடகமும் அரங்கியலும் பாட ஆசிரியரியை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் நாடகமும் அரங்கியலும் பாட ஆசிரியரியையும் வதிரி இரும்பு மதவடி பகுதியைச் சேர்ந்தவருமான திருமதி.புனிதா துஷ்யந்தன் அவர்களே உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த ஒரு வாரமாக நெஞ்சுக் குத்து ஏற்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு சென்றுள்ளார்.
அதன் பின்னர் நேற்று சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் மீண்டும் நெஞ்சுக் குத்து காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
அன்னாரின் பிரிவால் பாடசாலை சமூகமே பெரும் சோகத்தில் உள்ளது. அவரின் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.