அவுஸ்திரேலியா சிட்னியின் புறநகர் வேக்லியில் உள்ள கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் தேவாலயத்திற்குள் இன்று இரவு 7 மணியளவில், ஆயர் மற்றும் பல வழிபாட்டாளர்கள் தாக்கப்பட்டனர்.
இதன்போது, பலர் கத்தியால் குத்தப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டதை காவல்துறை உறுதிப்படுத்தியது.
காயமடைந்தவர்களுக்கு உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவசர சேவைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த கொடூர தாக்குதலின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன.
ஆயர் மார் மாரி இம்மானுவேல் சபையில் பேசுவதைக் காணொளி காட்டுகிறது
அதன்போது, முன்பாக சென்ற கறுப்பு நிற உடையணிந்த ஒருவர் அவரை பலமுறை கத்தியால் குத்தினார்.
யூடியூப்பில் காட்டப்பட்டுக் கொண்டிருந்த இந்த ஆராதனையின் நேரடி ஒளிபரப்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பு அலறல் சத்தம் கேட்கிறது.
முன்னதாக, கடந்த சனிக்கிழமையன்றும், சிட்னியின் வெஸ்ட்ஃபீல்ட் போண்டி சந்திப்பு வளாகத்தில், மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து சம்பவத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் 9 மாத குழந்தை உட்பட பலர் காயமடைந்தனர்.
இந்தநிலையில், தாக்குதல் நடத்தியவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.