விபரீத முடிவெடுத்து உயிரிழந்த ஆசிரியை – விசாரணை ஆரம்பம்.!

 



பதுளை – லுணுகலை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பதுளை – பிட்டமாருவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய ஆசிரியை ஒருவரே இவ்வாறு தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இவர் குறித்த பாடசாலையின் ஆசிரியை விடுதியில் வசித்து வந்துள்ள நிலையில், இவர் நேற்று முன் (24) பாடசாலையில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின் விடுதிக்குச் சென்றுள்ளார்.


இந்நிலையில் ஆசிரியை விடுதிக்குச் சென்றவர் மீண்டும் பாடசாலைக்கு திரும்பாததால் அவருடன் கடமையாற்றும் ஏனைய ஆசியைகள் குறித்த விடுத்திக்குச் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்து கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை