வவுனியா பொது வைத்தியசாலையின் பாதுகாவலர்கள் மீது தாக்குதல்

                                                                   


வவுனியா பொது வைத்தியசாலையின் பாதுகாவலர்கள் மீது இளைஞர்கள் குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று முன்தினம் (15.04.2024)  இரவு இடம்பெற்றுள்ளது.

வவுனியா பொது வைத்தியசாலையில் நோயாளி ஒருவரை பார்வையிடுவதற்காக நேற்றிரவு 11 மணியளவில் இளைஞர்கள் குழு ஒன்று வருகை தந்துள்ளது.

இதன்போது கடமையில் இருந்த பாதுகாவலர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.

சம்பவத்தில்தாக்குதலுக்கு இலக்கான பாதுகாவலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கருத்துரையிடுக

புதியது பழையவை