யாழில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக பனைமரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் இன்று(12) அதிகாலை பலத்த காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
பலத்த காற்று வீசிய சமயம் சங்கானை 07 ஆம் கட்டைப் பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் நின்ற பனை மரம் திடீரென முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனால், இரு மின் கம்பங்கள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அப்பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த சம்பவம் இடம்பெற்ற வேளை வீதியில் எவரும் பயணிக்காததால் பெரும் அனர்த்தமும் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Tags:
இலங்கை செய்திகள்