IPL போட்டியில் சென்னை சுபர் கிங்ஸ் அணியில் இணையும் யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரியின் இளம் வேகப்பந்து வீச்சாளர்.
தோனியை கவர்ந்த மற்றுமொரு குட்டி மாலிங்க
யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 17 வயது வேகப்பந்துவீச்சாளரான குகதாஸ் மாதுளன் இந்திய பிரீமியர் லீக் (IPL) T20 தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் (CSK) வலைப்பந்துவீச்சாளராக (Net Bowler) அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்கவின் பாணியில் பந்துவீசும் குகதாஸ் மாதுளன் 117ஆவது வடக்கின் சமர் பெரும் கிரிக்கெட் போட்டியில் பந்துவீசிய காணொளி அண்மையில் சமூக வலைதளங்களில் பிரபல்யமாக மாறியிருந்தது.
மாதுளன் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர்கள் குழாம் மற்றும் அதன் தலைவர் மஹேந்திர சிங் டோனி ஆகியோரின் கண்கானிப்பில் பயிற்சிகளைப் பெறுவதோடு, இம்முறை IPL தொடரில் முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக பந்துவீசும் வாய்ப்பினையும் பெற்றிருக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
.jpg)