நாட்டில் வீசா இன்றி தங்கியிருந்த சீன பெண்னை விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சீன பெண் கடுமையாக தாக்கியுள்ளார்.
இச்சம்பவமானது இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன் அன்றே அவரை கைது செய்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பேருவளை மங்கள மாவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய சீன பெண் என தெரியவந்துள்ளது.
குறித்த பகுதியில் சீனப் பெண் இருவர் வீசா இன்றி தங்கியுள்ளார்கள் என கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைக்காக சென்றிருந்தனர்.
இதன்போதே இத்தாக்குதல் சம்பவமானது இடம்பெற்றுள்ளதாக பொலிஜஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இலக்கான 2 பொலிஸ் உத்தியோகத்தர்களும் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.